‘நீ நான் நிழல்’ பட தயாரிப்பாளருக்கு டாக்டர் பட்டம்!

‘நீ நான் நிழல்’ பட தயாரிப்பாளருக்கு டாக்டர் பட்டம்!

செய்திகள் 15-Oct-2014 4:57 PM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘கள்வர்கள் படத்தில் நடித்தவரும், சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நீ நான் நிழல்’ படத்தின் தயாரிப்பாளருமான சலோன் சைமனை சிறந்த மனிதாபிமானி என்று பாராட்டி அமெரிக்க பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த இதற்கான விழாவில், நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், பி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் சைமனுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் பேராயர் டாக்டர் எஸ்.எம். ஜெயக்குமார். கொச்சியைச் சேர்ந்த சைமன் தமிழில் ‘கள்வர்கள்’ படத்தில் நடித்துள்ளதோடு மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, 'ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி?' என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். பெரிய தொழிலதிபரான இவர், ஏராளமான தொண்டு நிறுவனங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். இந்த கௌரவ டாக்டர் பட்டம் அளித்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்த சைமன், தொடர்ந்து தமிழில் நல்ல படங்களைத் தயாரிப்பேன் என்றும், நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;