விஷாலின் ‘பூஜை’க்கு அதே ‘யு/ஏ’ தான்!

விஷாலின்  ‘பூஜை’க்கு அதே ‘யு/ஏ’ தான்!

செய்திகள் 15-Oct-2014 4:57 PM IST VRC கருத்துக்கள்

விஷாலின் ‘பூஜை’க்கு அதே ‘யு/ஏ’ தான்!
படஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் ‘பூஜை’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. வன்முறை சண்டைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்ததாலேயே இப்படத்திற்கு யு/ஏ சர்டிஃபிக்கெட் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சண்டை காட்சிகளிலிருந்து சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கி விட்டால் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இன்று ரிவைசிங் கமிட்டி முன்பாக இப்படத்தை போட்டு காண்பித்துள்ளனர். ஆனால் படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்களும் படத்திற்கு ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் தான் வழங்கியிருக்கிறார்கள்! இதனால் விஷாலின் ‘பூஜை’ படம் ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாவது உறுதியாகி விட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;