‘கத்தி’, ‘பூஜை’யுடன் வரும் தனுஷ் படம்!

‘கத்தி’, ‘பூஜை’யுடன் வரும் தனுஷ் படம்!

செய்திகள் 15-Oct-2014 4:57 PM IST VRC கருத்துக்கள்

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவர, விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை தயாரிக்கும் ‘ஏஜிஎஸ்’ நிறுவனம் ‘அனேகனி’ன் டிரைலரை தீபாவளியன்று வெளியாகும் விஜய்யின் ‘கத்தி’ மற்றும் விஷாலின் ‘பூஜை’ படத்துடன் வெளியிட திட்டமிட்டுள்ளதாக குறப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆமிரா தஸ்தர் நடிக்க, மாறுபட்ட ஒரு கேரக்டரில் கார்த்திக்கும் நடித்துள்ளார். இப்படத்திற்கும் கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;