சினிமாவில் நடிக்க ஆசையா?

சினிமாவில் நடிக்க ஆசையா?

செய்திகள் 15-Oct-2014 2:13 PM IST Chandru கருத்துக்கள்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், தங்களுக்கான ‘களம்’ கிடைக்காமல் பலரும் தவித்துக் கொண்டிருப்பார்கள். இன்று பல புகமுகங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிப்புத் திறமையிருக்கும் நபர்களை தங்களது படத்தில் பயன்படுத்திக் கொள்ள தயாரிப்பு நிறுவனம் ஒன்று முன்வந்திருக்கிறது.

‘Potential Studios’ என்ற நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களின் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) நடைபெறவிருக்கிறது. தங்களின் முழுமையான விவரங்களுடன் கூடிய பயோடோட்டாவுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு காலை 10.30 மணிக்கு நேரில் வரவும். (வயது வரம்பு : 25 முதல் 60 வரையிலான ஆண், பெண்). முன் அனுபவம் உள்ளவர்களும், புதிதாக நடிக்க விரும்புபவர்களும் கலந்து கொள்ளலாம்.

முகவரி

13/7, 4வது மாடி, தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை - 600 017
(ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் பில்டிங்)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;