‘ரிவைசிங் கமிட்டி’யில் விஷாலின் ‘பூஜை’!

‘ரிவைசிங் கமிட்டி’யில் விஷாலின் ‘பூஜை’!

செய்திகள் 15-Oct-2014 12:23 PM IST Chandru கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் ‘பூஜை’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. சண்டைக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்ததாலேயே யு/ஏ கிடைத்ததாகவும், அந்த காட்சிகளை நீக்கிவிட்டு ‘ரிவைசிங் கமிட்டி’க்கு அனுப்பப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய இயக்குனர் ஹரி, ‘சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை நீக்கிவிட்டு ‘யு’ வாங்கினால் ‘பூஜை’ படத்தின் தன்மை கெட்டுவிடும் என்பதால் யு/ஏ உடன் படத்தை வெளியிடப்போவதாக’ தெரிவித்தார்.

ஆனால், இன்று ‘ரிவைசிங் கமிட்டி’யின் முன்பு ‘பூஜை’ படம் திரையிடப் போவதாக சில நிமிடங்களுக்கு முன்பு விஷால் ட்வீட் செய்திருக்கிறார். குறிப்பிட்ட அந்த சண்டைக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா? அல்லது திரும்பவும் அந்த காட்சிகளுடனே திரையிடப்படுகிறதா? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. ‘ரிவைசிங் கமிட்டி’யின் ரிசல்ட் கிடைத்ததும் ‘பூஜை’க்கான இறுதி சென்சார் சர்டிஃபிகேட்டை அறிவிக்கிறோம்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;