வாரிக் கொடுத்த தமிழ், தெலுங்கு திரையுலகம்!

வாரிக் கொடுத்த தமிழ், தெலுங்கு திரையுலகம்!

செய்திகள் 15-Oct-2014 11:47 AM IST Top 10 கருத்துக்கள்

நம் நாட்டு மக்களுக்கு ஒரு துயரம், பாதிப்பு என்றால் நம் சினிமா கலைஞர்கள் அதில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய ஒருபோதும் தயங்கியதில்லை. சமீபத்தில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் வீசிய ஹுட் ஹுட் புயல் மற்றும் கன மழையால் அம்மாநிலங்களில் பெரும் பொருட் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இந்த பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்துக்கு முதல் கட்டமாக 1000 கோடி ரூபாய் உதவியை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பல தமிழ் சினிமா கலைஞர்களும், தெலுங்கு சினிமா கலைஞர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன் வந்துள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவலின் படி யார் யார் எவ்வளவு தொகை வழங்கியுள்ளனர் என்பது கீழே தரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மேலும் மேலும் பல கலைஞர்கள் இடம் பெறலாம்!

தமிழ் சினிமா

சூர்யா - 25 லட்சம்
விஷால் - 15 லட்சம்
கார்த்தி - 12.5 லட்சம்
ஞானேவேல் ராஜா - 12.5 லட்சம்

தெலுங்கு சினிமா

ராமா நாயுடு - 50 லட்சம்
பவன் கல்யாண் - 50 லட்சம்
நந்தமுரி பாலகிருஷ்ணா - 30 லட்சம்
மகேஷ் பாபு - 25 லட்சம்
கிருஷ்ணா, விஜய நிர்மலா தம்பதி - 25 லட்சம்
தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் - 25 லட்சம்
ஜூனியர் என்.டி.ஆர். - 20 லட்சம்
அல்லு அர்ஜுன் - 20 லட்சம்
நாகார்ஜுனா - 20 லட்சம்
ராம் சரண் தேஜா - 5 லட்சம்
ராம் - 10 லட்சம்
நிதின் - 10 லட்சம்
பிரம்மானந்தம் - 3 லட்சம்
சுதீப் கிஷான் - 2.5 லட்சம்
ராகுல் ப்ரீத் சிங் - 1 லட்சம்
நந்து - 1 லட்சம்
ராஷி கன்னா - 1 லட்சம்

(மேலும் விவரங்கள் கிடைத்த பிறகு மறுமுறை பிரசுரிக்கிறோம். தொடர்ந்து வாசியுங்கள்...)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;