’ஸ்ரீதேவி’யை மாற்ற முடியாது! – RGV அதிரடி!

’ஸ்ரீதேவி’யை மாற்ற முடியாது! – RGV அதிரடி!

செய்திகள் 15-Oct-2014 10:31 AM IST VRC கருத்துக்கள்

ராம்கோபால் வர்மா தயாரித்துள்ள புதிய படத்தின் சர்ச்சை மேலும் சூடு பிடித்துள்ளது. பதினைந்து வயது சிறுவன் ஒருவனுக்கு அவனை விட அதிக வயதுடைய பெண் ஒருவர் மீது ஏற்படும் காதல் தான் இப்படத்தின் மைய கதை. இப்படத்திற்கு முதலில் ‘சாவித்திரி’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் சம்பந்தமாக சில சர்ச்சைகள் எழ, படத்திற்கு ‘ஸ்ரீதேவி’ என்று பெயர் சூட்டினார் ராம்கோபால் வர்மா. இந்த தலைப்பிற்கும் நடிகை ஸ்ரீதேவி தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி, ராம்கோபால வர்மாவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் நடிகை ஸ்ரீதேவி! இந்த நோட்டீஸுக்கு பதில அளித்துள்ள ராம் கோபால் வர்மா, அதில் ‘‘எந்த காரணத்தை கொண்டும் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயரை மாற்ற மாட்டேன். சட்டப்படி ஸ்ரீதேவி என்ற பெயரை வைக்க எனக்கு முழு உரிமை உண்டு. ஒரு சிறுவனுக்கு அவனை விட அதிக வயதுடைய ஒரு பெண் மீது ஏற்படும் காதல் தான் படத்தின் மைய கரு. இதுபோன்ற கதை பின்னணியில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் நிறைய படங்கள் வெளியாகியுள்ளாண். ஸ்ரீதேவி என்ற பெயரும் பல இந்திய படங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த படம் நடிகை ஸ்ரீதேவியை குறிக்கும் படம் அல்ல. அதனால் இந்த படத்திற்கு ‘ஸ்ரீதேவி’ என்ற பெயர் வைப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று கூறியிருக்கிறார்.
மேலும் ராம்கோபால் வர்மா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளதில் ‘ ‘‘யாரோ சிலர் ஸ்ரீதேவியிடம் இப்படம் குறித்து தவறான தகவல்களை கொடுத்துள்ளர் போலும்! அதன் விளைவாக தான் இந்த வக்கீல் நோட்டீஸ் விவகாரம் எல்லாம்! நான் மிகவும் மரியாதை வைத்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி! சின்ன வயதிலிருந்தே எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர்! அவரிடமிருந்து இதுபோன்ற ஒரு எதிர்ப்பு குரலை நான் எதிர்பார்க்கவில்லை! இது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது’’ என்று கூறியிருக்கிறார்!
ராம்கோபால வர்மாவின் சிஷ்யர் கிரன் பிரசாத் இயக்கியுள்ள இப்பட்த்தில் அனுஷ்க்ருதி கோவிந்த் சர்மா தான் ஸ்ரீஇதேவி கேரக்டரில் நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாம் - TRAILER


;