கன்னடத்திலும் பாடகராக களமிறங்கும் தனுஷ்?

கன்னடத்திலும் பாடகராக களமிறங்கும் தனுஷ்?

செய்திகள் 15-Oct-2014 10:31 AM IST Chandru கருத்துக்கள்

தமிழில் தன் படங்களில் மட்டுமல்லாது பிறர் படங்களிலும் பாடல்களைப் பாடி வரும் நடிகர் தனுஷிற்கு கன்னடத்தில் பாடுவதற்கு அழைப்பு வந்திருக்கிறதாம். ஹர்ஷா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ‘வஜ்ரகயா’ என்ற கன்னட படத்தின் ஒரு பாடல் ‘ஒய் திஸ் கொலவெறி’ ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதாம். ‘வஜ்ரகயா’வின் இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, நடிகர் தனுஷை சினிமா விழாக்களில் பலமுறை சந்தித்திருக்கிறாராம். அப்போது, இப்பாடலைப் பற்றி நடிகர் தனுஷிடம் கூறி, பாடுவதற்கு அழைப்புவிடுத்தாராம். தனுஷிற்கும் அந்தப் பாடல் ரொம்பவும் பிடித்துப்போகவே, இயக்குனர் ஹர்ஷா, நடிகர் சிவராஜ்குமார், இசையமைப்பாளர் அர்ஜுன் உள்ளிட்ட ‘வஜ்ரகயா’ டீம் தற்போது பாடல் பதிவிற்காக சென்னையில் முகாமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;