காஷ்மீர் துயர் துடைப்பு பணியில் ஆன்ட்ரியா, ராய் லட்சுமி!

காஷ்மீர் துயர் துடைப்பு பணியில் ஆன்ட்ரியா, ராய் லட்சுமி!

செய்திகள் 15-Oct-2014 10:21 AM IST VRC கருத்துக்கள்

காஷ்மீரில் கடந்த மாதம் கொட்டி தீர்த்த பெரும் மழை காரணமாக ஒட்டுமொத்த ஆப்பிள் தேசமே சேதமாகிவிட்டது. காஷ்மீரையும், அங்குள்ள மக்களையும் மீட்டெட்டுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ‘ஈமா’ எனும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்டர்டெய்ன்மென்ட் அசோஸியேஷன். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 18-ஆம் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீமுத்தா வெங்கட சுப்பாராவ் அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகைகள் ஆன்ட்ரியா, ராய்லட்சுமி, பாடகி சக்திஸ்ரீ கோபாலன், பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், ஹரிச்சரண், ரஞ்சித், ராகுல் நம்பியார், திருச்சூர் சகோதரர்கள் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடவும், நடனம் ஆடவும் இருக்கிறர்கள்.இதற்காக 500 ரூபாய் முதல் 1250 ரூபாய் வரையிலான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சி சென்னையில் மட்டுமல்லாது மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது. அந்தந்த மாநில நிகழ்ச்சிகளில் அம்மாநில கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்படும் மொத்த நிதியை காஷ்மீரின் துயர்துடைப்பு பணிக்கு வழகப்பட இருக்கிறது ‘ஈமா’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூலி 2 வில் எனக்கு 96 தோற்றங்கள் - ராய் லட்சுமி


;