ரசிகர்களை மிரட்ட வரும் இன்னொரு ‘ஹாரர்’ படம்!

ரசிகர்களை மிரட்ட வரும் இன்னொரு ‘ஹாரர்’ படம்!

செய்திகள் 15-Oct-2014 10:07 AM IST Chandru கருத்துக்கள்

போகிற போக்கைப் பார்த்தால் கோலிவுட்டில் வாரம் ஒரு பேய்ப் படம் ரிலீஸானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது மட்டும் கிட்டத்தட்ட 20 ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது ‘டெய்சி’ என்றொரு புதிய திகில் படம் ஒன்றும் இணைந்திருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்குகிறார்.

இந்த ‘சூப்பர்நேச்சுரல் ஹாரர்’ படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறதாம். சிங்கப்பூரில் ஆரம்பித்து சென்னையில் முடிவதுபோல் படமாக்கப்படும் ‘டெய்சி’யின் கதையை மதுரை மண்ணைச் சேர்ந்த ஒருவர் எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் சிங்கப்பூர் டிவி சீரியல்களை இயக்கியவராம். இசைக்கு சிவ சரவணன், ஒளிப்பதிவுக்கு மணீஷ் மூர்த்தி, எடிட்டிங்கிற்கு ஹரிஹரண் என முற்றிலும் புதுமுக டெக்னீஷியன்கள் பணிபுரிந்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;