‘அடுத்த படம் சூர்யாவுடன் தான்!’ - ஹரி உறுதி

‘அடுத்த படம் சூர்யாவுடன் தான்!’ - ஹரி உறுதி

செய்திகள் 14-Oct-2014 2:04 PM IST VRC கருத்துக்கள்

ஹரி இயக்கியுள்ள ‘பூஜை’ படம் வருகிற 22-ஆம் தேதி, தீபாவளியன்று ரிலீசாகிறது. இதையொட்டி இயக்குனர் ஹரி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஹரியிடம், ‘‘உங்களுடைய அடுத்த படம் யார் கூட?’’ என்று கேள்வி கேட்டபோது, ‘‘எனது அடுத்த படம் சூர்யா சார் கூட’’ என்று சொன்னார். மேலும் அவர் கூறும்போது, ‘‘இரண்டு, மூன்று கதைகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். அதில் ஒன்று ‘ சிங்கம்’ படத்தின் தொடர்ச்சி! ‘பூஜை’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு சூர்யா சாருடன் உட்காந்து, இந்த கதைகளை விவாதிக்க உள்ளேன். அதன் பிறகு தான் எந்த கதையை படமாக்குவது என்று முடிவாகும். ஆனால் என்னுடைய அடுத்த பட ஹீரோ சூர்யா சார் தான்! அது உறுதி’’ என்றார். சூர்யாவுடன் அடுத்து ஹரி இணையவிருக்கும் படம் ஹரி இயக்கும் 13-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;