‘பூஜை’ படம் ‘யு/ஏ’ வாங்கியது ஏன்?

‘பூஜை’ படம் ‘யு/ஏ’ வாங்கியது ஏன்?

செய்திகள் 14-Oct-2014 12:31 PM IST Chandru கருத்துக்கள்

ஹரி படம் என்றால் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கும் என்பதை அவருடைய முந்தைய படங்களான சிங்கம், சிங்கம் 2, வேங்கை, கோவில் போன்ற படங்களைப் பார்த்தாலே தெரியும். அதேநேரத்தில் பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் அவருடைய படங்களில் பஞ்சமிருக்காது. இதேபோன்ற பாணியில் தற்போது விஷாலை வைத்து ஹரி இயக்கியிருக்கும் ‘பூஜை’ படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தை சென்சாருக்கு அனுப்பியபோது, அதைப் பார்வையிட்ட சென்சார் அதிகாரிகள் படத்திற்கு முதலில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கினார்கள். பின்னர், படத்தில் வரும் சில வன்முறை நிரம்பிய ஆக்ஷன் காட்சிகளை நீக்கினால் ‘யு’ கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், படத்தின் முக்கியமான அந்த காட்சிகளை நீக்கினால் அதன் தன்மை கெட்டுவிடும் எனக்கருதிய விஷாலும், ஹரியும் படத்தை ‘யு/ஏ’ சான்றிதழுடனே வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். ‘பூஜை’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெரு நாய்கள் - டிரைலர்


;