புதுமுகங்களின் களம்!

புதுமுகங்களின் களம்!

செய்திகள் 14-Oct-2014 11:36 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஜீவா ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராபர்ட் எஸ்.ராஜ் இயக்கும் படம் களம்’. இப்படத்தை ‘அருள் மூவீஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.கே.சந்திரன் தயாரிக்கிறார். குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் முகேஷ், இப்படத்தில் Arri Alexa cooke S 4i என்ற அதி நவீன கேமராவை பயன்படுத்தி காட்சிகளை படம் பிடிக்கிறாராம். இப்படம் குறித்து இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ் குறிப்பிடும்போது, ‘‘களம்' ஒரு களத்தை பற்றிய கதை. ஒரு விலை மதிப்பிட முடியாத குறிப்பிட்ட ஒரு மாளிகையை பற்றிய கதை. இதில் ஸ்ரீனி, அம்ஜெத், லக்ஷ்மி ப்ரியா, மது சூதனன் மற்றும் பேபி ஹியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புக்களை சுபீஷ் ஏற்றுள்ளார். பிரகாஷ் நிக்கி இப்பத்தின் மூல இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;