அப்துல் கலாமுக்கு மரியாதை... விவேக்கின் புதிய முயற்சி!

அப்துல் கலாமுக்கு மரியாதை... விவேக்கின் புதிய முயற்சி!

செய்திகள் 14-Oct-2014 11:20 AM IST Chandru கருத்துக்கள்

படங்களில் நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களையும் பரப்புவதில் நடிகர் விவேக் முன்னோடி. அதோடு, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வழிகாட்டுதல்களையும் நீண்டநாட்களாக பின்பற்றி வருகிறார். ‘‘நாடு முழுவதும் மரக்கன்றுகளை உங்களுடைய தலைமையில் நட வேண்டும்’’ என நடிகர் விவேக்கை அழைத்து அப்துல் கலாம் சொன்ன¬த் தொடர்ந்து, அப்பணியை தன் தலையாய கடமையாகக் கருதி இப்போது வரை அதை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார். லேட்டஸ்ட் தகவல்களின்படி நடிகர் விவேக் இதுவரை கிட்டத்தட்ட 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறாராம். இவ்வளவு பெரிய சமூக சேவையை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் விவேக், தற்போது அப்துல் கலாமுக்கு மேலும் ஒரு கௌரவத்தை ஏற்படுத்த வேண்டும் என புதிய முயற்சி ஒன்றில் இறங்கியிருக்கிறார்.

நாளை (அக்டோபர் 15) அப்துல் கலாமின் பிறந்தநாள். அவரின் பிறந்தநாளை ‘தேசிய மாணவர் நாளா’க அறிவிக்க வேண்டும் என்பதை அரசிடம் வலியுறுத்த இருக்கிறாராம். அதோடு இந்த முயற்சியில் தன்னுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ‘இந்திய மாணவர்களின் முன்மாதிரியாக இருப்பவர் அப்துல் கலாம் அவர்கள். தன் வாழ்க்கை முழுவதையும் மாணவர்களைப் பற்றி சிந்திப்பதற்காகவே அர்ப்பணித்தவர். எனவே அவருடைய பிறந்தநாளை ‘தேசிய மாணவர் நாள்’ என அறிவிக்க வேண்டும்’ என்று தனது ட்வீட்டில் நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - கலக்கு மச்சான் ஆடியோ பாடல்


;