கமலின் 3 படங்கள் எப்போது ரிலீசாகும்?

கமலின் 3 படங்கள் எப்போது ரிலீசாகும்?

செய்திகள் 14-Oct-2014 11:08 AM IST VRC கருத்துக்கள்

வழக்கமாக கமல்ஹாசன் ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்திற்கு போவார்! ஆனால் இப்போது அவர் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என மூன்று படங்களில் நடித்து வருகிறார். ‘விஸ்வரூபம்’ வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகியுள்ள நிலையில் கமல் நடிப்பில் இன்னமும் ஒரு படம் கூட வெளியாகவில்லை! ‘விஸ்வரூபம்’ படத்தை தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடிக்க துவங்கினார் கமல்ஹாசன். கமல் நடிப்பில், ‘விஸ்வரூபம்’ படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம் 2’ ரிலீசாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக, ‘உத்தமவில்லன்’ எனும் ஒரு படத்தை துவங்கி அதில் நடிக்க துவங்கினார் கமல்ஹாசன்! இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, ‘திருசியம்’ படத்தின் ரீ-மேக்கான் ‘பாபநாசம்’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டார் கமல்ஹாசன்! ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு இப்போது ‘பாபநாசம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்.

‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் நிறைய சி.ஜி.வொர்க் இருப்பதாலும், ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு மிச்சம் இருப்பதாலும், இந்த படத்திற்கு முன்னதாக ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிட திட்டமிட்டு தான் அந்த படத்தின் வேலைகளை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் துரிதப்படுத்தி இப்போது அதன் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் இப்படத்தை அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தியன்று ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அக்டோபர் 2-ஆம் தேதியன்று படத்தை ரிலீஸ் செய்வதற்கான எந்த வேலைகளும் நடைபெறாத நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ‘உத்தம வில்ல’னை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய சில தகவல்களின் படி நவம்பர் 7-ஆம் தேதியும் ‘உத்தம் வில்லன்’ ரிலீசாகாதாம்!

நமக்கு கிடைத்த நம்பகத்தனமான தகவலின் படி ‘உத்தம வில்ல’னை பொங்கலையொட்டி வெளியிட இருக்கிறார்களாம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ ஆகிய படங்கள் பொங்கல் ரிலீசாக திரைக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்போது அந்த படங்களுடன் கமலின் ‘உத்தம் வில்லன்’ படமும் ரிலீஸாகும் என்றால் வருகிற பொங்கல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!
‘விஸ்வரூபம் 2’ பட ரிலீஸ் காலதாமதத்திற்கு இப்படத்தை தயாரிக்கும் ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தார் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தான் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படத்தையும் தயாரித்துள்ளனர். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தினை விரைவில் ரிலீஸ் செய்யும் வேலைகளில் அந்நிறுவனத்தினர் ஈடுப்பட்டுள்ளதால கமலின் ‘விஸ்வரூபம் 2’ படத்தினை ‘ஐ’ வெளியாகி ஓரிரு மாதங்கள் கழித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது கமலின் ‘விஸ்வரூபம் 2’ அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி, அல்லது மார்ச் மாதம் வெளியாகலாம்! ஆனால் கமலின் ‘பாபநாசம்’ எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;