தமிழ் சினிமா மாற வேண்டும்! - நீதிமன்றம் கருத்து

தமிழ் சினிமா மாற வேண்டும்! - நீதிமன்றம் கருத்து

செய்திகள் 14-Oct-2014 10:58 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு சில வாரங்களுக்கு முன்பு ‘கத்தி’ மற்றும் ‘புலிப்பார்வை’ படங்களை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல விசாரணைகளுக்குப் பிறகு, நேற்று இந்த இரண்டு படங்களுக்கென எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது வரும் தமிழ்ப் படங்களில் மக்களுக்கு எதிரான விஷயங்கள் நிறைய இடம்பெறுவதாகக் கூறியுள்ள நீதிமன்றம், தமிழ் சினிமாவில் மாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும் கூறி சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதன் விபரம் கீழே...

* மது அருந்தும்–புகை பிடிக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

* திரைப்படங்களில் குடும்ப பாரம்பரியம், மனிதாபிமானம், நாட்டுப்பற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* கதாநாயகன், கதாநாயகி ஆகியோர் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

* பாலியல் வன்முறை, பெண்களை தாக்குவது, கேலி செய்வது, கற்பழிப்பு, ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்தம் தரும் ஆபாச வசனங்கள், பெண்களை இழிவுபடுத்தி பேசுவது, தரக்குறைவாக பேசுவது போன்றவை படத்தில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* வன்முறை, கொடூரமான காட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வன்முறையை நியாயப்படுத்துதல் கூடாது. சட்டவிரோத செயல்கள் செய்வதை பெருமையாக கருதுவது என்பது கூடாது.

* சட்டவிரோதமான செயல்கள், அதர்மமான செயல்கள் வெற்றி பெறுவது போன்ற காட்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* எதிர்மறையான தலைப்புகள், வசனங்கள், கருத்துகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

* புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை பிறர் பெருமையாக கருதுவதை தவிர்க்க படத்தில் கதாநாயகன் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

* குடும்ப பாரம்பரியம், உறவுகளின் முக்கியத்துவம், மனிதாபிமானம், ஒழுக்கம், தேசப்பற்று போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும்.

* நீதிபோதனைகளை அறிவுறுத்தும் வகையிலும், மக்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையிலும் சினிமா பாடல்கள் இருக்க வேண்டும்.

* உண்மையானவராகவும், நேர்மையானவராகவும், சமூக அக்கறை உள்ளவராகவும், நாட்டுப்பற்று உள்ளவராகவும் இருப்பவர்கள் சென்சார் போர்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.’’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;