‘ஐ’ பட்ஜெட்? அடுத்த படம்? - ஷங்கர் அறிவிப்பு

‘ஐ’ பட்ஜெட்? அடுத்த படம்? - ஷங்கர் அறிவிப்பு

செய்திகள் 14-Oct-2014 10:06 AM IST Chandru கருத்துக்கள்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படம் வரும் தீபாவளிக்கு வெளியாகப்போவதில்லை. கடைசிகட்ட சிஜி வேலைகள் போய்க் கொண்டிருப்பதால் நவம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ‘ஐ’ படம் குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷங்கர் சில விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது, பல ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் சொல்லப்பட்டு வந்ததுபோன்று ‘ஐ’ படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகமெல்லாம் இல்லையாம். 100 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டிலேயே ‘ஐ’ உருவாக்கப்பட்டிருப்பதாக ஷங்கர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதேபோல் ‘ஐ’ படத்தை எடுப்பதற்கு தான் நீண்டகாலம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படும் கருத்தையும் ஷங்கர் மறுத்திருக்கிறார். 2013ஆம் ஆண்டு தீபாவளிக்கே ‘ஐ’ படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், தயாரிப்பு தரப்பின் சில காரணங்களுக்காகவே படம் எடுக்க இவ்வளவு காலம் ஆனதாகவும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். தவிர இடையில் சில மாதங்கள் ஷங்கர் ஓய்வில்தான் இருந்தாராம். அந்த நேரத்தில் அவருடைய அடுத்த படத்திற்கான 3 கதைகளை எழுதி முடித்துவிட்டாராம். அதேபோல் ‘எந்திரன் 2’ படத்தை இயக்கும் ஆசையும் ஷங்கருக்கு இருக்கிறதாம். ஆனால், அது எப்போது சாத்தியமாகும் என்பது அவருக்கே தெரியாத ரகசியம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஷங்கர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;