சர்ச்சை முத்த வீடியோ... சாட்டையடி கொடுத்த நடிகை!

சர்ச்சை முத்த வீடியோ... சாட்டையடி கொடுத்த நடிகை!

செய்திகள் 14-Oct-2014 9:24 AM IST Chandru கருத்துக்கள்

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றால் ஒருபுறம் நல்ல விஷயங்களை எளிதில் பகிர்ந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்தாலும், இன்னொருபுறம் அதனை தவறாகப் பயன்படுத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ‘சைமா விருது வழங்கும் விழா’விற்காக மலேசியாவிற்கு சென்றிருந்த நடிகர் சிம்பு, அங்கே கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவுடன் இணைந்து போட்டோ ஒன்றை சாதாரணமாக எடுத்துக் கொண்டார். அது இணையதளங்களில் வெளிவந்தபோது, யாரும் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அதன் பிறகு ஓரிரு நாட்களில் ‘பப்ளிக்கில் முத்தம் கொடுத்த சிம்பு, பூனாச்சா வீடியோ’ என்ற பெயரில் சில விஷமிகள் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை, மேற்கண்ட புகைப்படத்துடன் இணைத்து வெளியிட்டார்கள்.

போட்டோவில் இருந்த சிம்பு, ஹர்ஷிகா அணிந்திருந்த அதே கலரில், அந்த வீடியோவில் முத்தமிட்டுக் கொண்டிருந்தவர்களின் உடைகளும் இருந்ததால், பலரும் அதை உண்மை என்றே நம்ப, பெரிய அளவில் அந்த வீடியோ இணையதளமெங்கும் உலாவி வந்தது. அந்த வீடியோ உண்மையா என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் ஆராயாமல் சில முக்கிய இணையதளங்கள்கூட இதைப் பகிர்ந்து வந்தன. இதுகுறித்து நடிகர் சிம்புவிடம் அப்போது கேட்கப்பட்டபோது, ‘‘நான் சம்பந்தப்படாத ஒரு வீடியோவைப் பற்றி கருத்துக்கூற என்ன இருக்கிறது?’’ என அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அவர் அப்படிச் சொன்ன பிறகும்கூட அந்த வீடியோ பரவுவது நிற்கவில்லை. இன்னொருபுறம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகை ஹர்ஷிகா, விஷமிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில்....

‘‘சைமா முத்த வீடியோ என்ற பெயரில் கீழ்த்தரமான வீடியோ ஒன்று வெளிவந்தபோது, அதைப் பற்றி கருத்துக்கூறாமல் தவிர்த்து வந்தேன். ஆனால், அப்படியும் அவர்கள் அந்த வீடியோவைப் பரப்புவதை நிறுத்தவதாக இல்லை. இதனால், இப்போது நான் எல்லோருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள நினைக்கிறேன்... சம்பந்தப்பட்ட வீடியோவில் இருப்பது நிச்சயமாக நான் இல்லை. வேலையில்லாத சில விஷமிகளால் ‘மார்ஃபிங்’ முறையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வீடியோவைப் பரப்புபவர்கள் பப்ளிசிட்டிக்காக இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்வதை நிறுத்திவிட்டு, பிரயோஜனமாக எதையாவது செய்யுங்கள்!’’ என கொந்தளித்துள்ளார் ஹர்ஷிகா.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;