ராம்கோபால் வர்மா V/S ஸ்ரீதேவி!

ராம்கோபால் வர்மா V/S ஸ்ரீதேவி!

செய்திகள் 13-Oct-2014 1:05 PM IST VRC கருத்துக்கள்

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்துள்ள புதிய பட விவகாரம் இன்னும் சூடு பிடித்துள்ளது. முதலில் ‘சாவித்திரி’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு சில எதிர்ப்புகள் கிளம்ப, இப்போது ‘ஸ்ரீதேவி’ என்று பெயர் வைத்துள்ளார் ராம்கோபால் வரமா! இப்போது இந்த தலைப்பிற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘‘சர்ச்சைக்குரிய ஒரு படத்திற்கு என் மனைவியின் பெயரை தலைப்பாக வைத்துள்ளனர். என் மனைவி ஒரு சினிமா பிரபலம்! அதனால் இப்படம் மூலம் என் மனைவியின் பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ‘ஸ்ரீதேவி’ என்ற பெயருக்கு தடைவிதிக்க வேண்டும்’’ என்று ராம்கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம் நடிகை ஸ்ரீதேவியின் கண்வரும், பிரபல ஹிந்திப் பட தயாரிப்பாளருமான போனி கபூர்! ஏற்கெனவெ இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து, மாதர் சங்கத்தினர் உட்பட பல சமூக அமைப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில் இப்போது போனி கபூரும் பட தலைப்புக்கு எதிராக களம் இறங்கியிருப்பதால் ராம்கோபல் வரமாவின் படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - ஏண்டி ஏண்டி பாடல் வீடியோ


;