‘கத்தி’யில் ‘துப்பாக்கி’ சென்டிமென்ட்!

‘கத்தி’யில் ‘துப்பாக்கி’ சென்டிமென்ட்!

செய்திகள் 13-Oct-2014 12:01 PM IST Chandru கருத்துக்கள்

அக்டோபர் 22ல் தியைரங்குகளில் வெடி வெடிக்கக் காத்திருக்கிறது விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம். ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம், அனிருத்தின் இசை, சமந்தா காம்பினேஷன் என எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ‘இளையதளபதி’ ரசிகர்கள். இந்த வாரத்தில் ‘கத்தி’யின் முழு நீள டிரைலரும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ‘கத்தி’க்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். ‘கத்தி’ படம் ஓடும் நேரம் (ரன்னிங் டைம்) கிட்டத்தட்ட 2 மணி 46 நிமிடங்களாம். ஏற்கெனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ படமும் கிட்டத்தட்ட 2 மணி 46 நிமிடங்கள் என்பதால் ‘சென்டிமென்ட்டா’கவும் இதைப் பார்க்கிறது ‘கத்தி’ படக்குழு! கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த ‘ஜில்லா’ படம் 2 மணி 55 நிமிடங்கள் ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;