குவியும் போலிகள்... ஒரிஜினலுக்காக காத்திருக்கும் குஷ்பு!

குவியும் போலிகள்... ஒரிஜினலுக்காக காத்திருக்கும் குஷ்பு!

செய்திகள் 13-Oct-2014 10:35 AM IST Chandru கருத்துக்கள்

டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் போல் இன்று அதிகாரபூர்வ ட்விட்டர் அக்கவுன்ட்டும், ஃபேஸ்புக் கணக்கும் அவசியமாகிவிட்டது சினிமா பிரபலங்களுக்கு. அவரவர் பெயரில் ஒரிஜினல் கணக்கைத் துவங்காவிட்டால், பிரபலங்களின் பெயர்களில் போலிகள் ‘கும்மியடிக்க’த் தொடங்கிவிடுவார்கள். அப்படி போலிகளால் சினிமா நட்சத்திரங்கள் சிக்கலுக்கு உள்ளாகி, பின்னர் சைபர் கிரைமில் புகார் கொடுத்த வரலாறுகள் கோலிவுட்டில் ஏராளம்.

தனது பெயரிலும் கிட்டத்தட்ட 23 போலி ஃபேஸ்புக் பக்கங்கள் இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார். அதோடு, தனக்கான வெரிஃபைடு ஃபேஸ்புக் பக்கம் ஒன்றைத் துவங்கி, அதை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்து நிர்வகிக்க இருக்கிறாராம். அதேபோல் தனது ட்விட்டர் அக்கவுன்ட்டுக்கும் ‘வெரிஃபைடு’ வாங்க முடிவு செய்திருக்கிறாராம். இவ்வளவு நாட்களாக எப்படி அதிகாரபூர்வமாக்குவது என்பது தெரியாததால்தான் தான் அதைச் செய்யவில்லை என்பதையும் குஷ்பு தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - நீதானே ஆடியோ பாடல்


;