ஹாங்காங், பிரான்ஸுக்கு பறக்கும் ‘லிங்கா’ டீம்!

ஹாங்காங், பிரான்ஸுக்கு பறக்கும் ‘லிங்கா’ டீம்!

செய்திகள் 13-Oct-2014 10:23 AM IST Chandru கருத்துக்கள்

நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்றிக்கொண்டிருக்கிறது ரஜினியின் ‘லிங்கா’. நேற்று நடிகர் சந்தானம் ‘லிங்கா’ படத்தின் 3 புதிய ஸ்டில்களை தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். அதில் அவர் ரஜினியுடன் நெருக்கமாக தோளில் கை போட்டபடி வந்த ஸ்டில், இப்படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி விசாரித்தபோது, ‘லிங்கா’ படத்தில் தற்போதைய காலகட்டக்கதையில் வரும் ரஜினிக்கு நண்பராக சந்தானமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் வரும் ரஜினியுடன் கருணாவும் நடித்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.

அதேபோல் தற்போது ‘லிங்கா’ படத்தின் ‘டாக்கி போர்ஷன்’ இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படம் பிடிக்க வேண்டியிருப்பதாகவும் ‘லிங்கா’விற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். அதில் ஒரு பாடலான ரஜினியின் அறிமுகப் பாடலை ஹாங்காங், மெக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அனேகமாக இந்த மாத இறுதியில் அதற்கான பயணம் இருக்குமாம். அதேபோல் ரஜினி, சோனாக்ஷி பங்குபெறும் டூயட் பாடல் ஒன்றிற்கான படப்பிடிப்பு அக்டோபர் 14ம் தேதி ஹைதராபாத்தில் துவங்க இருக்கிறதாம்.

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;