விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஷங்கர் படம்!

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஷங்கர் படம்!

செய்திகள் 13-Oct-2014 10:01 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கும் ‘ஐ’ படம் தீபாவளிக்கு நிச்சயமாக வெளியாகப் போவதில்லை. படத்தின் கடைசி கட்டப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனேகமாக ‘ஐ’ படம் நவம்பர் மாத இறுதியில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கின்றன.

இந்நிலையில், தனது ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ள ‘கப்பல்’ படத்தை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளில் தற்போது மும்முரமாக இருக்கிறார் ஷங்கர். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கியிருக்கும் வைபவ், சோனம் பஜ்வா, கர்ணா, ‘விடிவி’ கணேஷ், ‘ரோபோ’ ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘மூடர்கூடம்’, ‘ஒரு கன்னியும் மூணு களாவணிகளும்’ படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவை இன்னும் ஒரு சில நாட்களில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இப்படம் குறித்து தனது ட்வீட்டில், ‘‘ரொமான்டிக் காமெடிப் படமான ‘கப்பல்’ படத்தை வெளியிடுவதன் மூலம் ‘எஸ் பிக்சர்ஸ்’ மீண்டும் தனது பணியைத் துவங்கியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிப்பதற்கு உத்திரவாதமுள்ள இப்படத்தை என்னிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கார்த்திக் இயக்கியுள்ளார்!’’ என்று இயக்குனர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;