பிருத்திவிராஜ், பார்வதி மேனன் படத்திற்கு தற்கொலை மிரட்டல்!

பிருத்திவிராஜ், பார்வதி மேனன் படத்திற்கு தற்கொலை மிரட்டல்!

செய்திகள் 11-Oct-2014 11:30 AM IST VRC கருத்துக்கள்

1960 காலகட்டத்தில் கேரளாவில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்திய காதல் ஜோடி மொய்தீன் – காஞ்சனமாலா! சமூகத்தில் இவர்களது காதலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் கடைசி வரையிலும் இவர்களது காதல் கை கூடவில்லை! இருந்தாலும் இருவரும் திருமணம் செய்துகொண்டவர்களை போன்றுதான் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் மொய்தீன் இறந்து விட்டார். 74 வயதான காஞ்சனமாலா இன்னும் உயிரோடு இருக்கிறார். இவர்களது காதலை மையமாக வைத்து ஆர்.எஸ்.விமல் என்பவர் ‘எந்நு நின்டெ மொய்தீன்’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் மொய்தீன், காஞ்சனமாலா காதலை கொச்சைப்படுத்தும் விதமாக பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கேள்விப்பட்ட காஞ்சனமாலா, படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சித்திருக்கிறார். ஆனால் இயக்குனர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லையாம்! இதனால் அப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என்றும், அதையும் மீறி படத்தை ரிலீஸ் செய்யும் பட்சத்தில் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார் காஞ்சனமாலா! இப்படத்தில் மொய்தீனாக ப்ருத்திவிராஜ் நடிக்க, காஞ்சனமாலாவாக ‘மரியான்’ பட புகழ் பார்வதி மேனன் நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் வாலி பாடல் மேக்கிங் வீடியோ


;