சன்னி லியோனால் ‘A’ சர்டிஃபிகெட் வாங்கிய தெலுங்கு ‘வி.வி.எஸ்.’

சன்னி லியோனால் ‘A’ சர்டிஃபிகெட் வாங்கிய தெலுங்கு ‘வி.வி.எஸ்.’

செய்திகள் 10-Oct-2014 5:06 PM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக் ஆக உருவாகியுள்ள படம் ‘கரண்ட் டீகா’. இப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் ஒரு குத்தாட்டம் இடம் பெற்றுள்ளதால், இப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சர்டிஃபிகெட் தான் வழங்கியிருக்கிறார்கள்! சன்னி லியோனின் இந்த குத்தாட்டத்திற்கு மட்டும் இதன் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்துள்ளாராம். படத்தில் இந்த குத்தாட்ட பாடலை தவிர்க்கும் பட்சத்தில் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகெட் வழங்க தயாராக இருந்தார்களாம் சென்சார் குழுவினர். இதனால் பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம் இப்பட தயாரிப்பாளர்! தெலுங்கின் பிரபல நடிகர் மஞ்சு மனோஜ், ரகுல் ப்ரீத் சிங் முதலானோர் நடித்து, ராகேஸ்வர் ரெட்டி இயக்கியுள்ள படம் இது. இப்படத்திற்கு வருகிற 17-ஆம் தேதி ரிலீஸ் தேதி குறித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;