தமிழ் சினிமாவில் புதிய இரட்டை இசையமைப்பாளர்கள்!

தமிழ் சினிமாவில் புதிய இரட்டை இசையமைப்பாளர்கள்!

செய்திகள் 10-Oct-2014 2:43 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பல இரட்டை இசை அமைப்பாளர்கள் வெற்றி வலம் வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் விரைவில் இணையவிருக்கும் இரட்டை இசை அமைப்பாளர்கள் சுபாஷ் – ஜவஹர். சமீபத்தில் ரிலீசாகி ரசிர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘தலக்கோணம்’ பதிற்கு இசை அமைத்திருப்பவர்கள் இவர்கள் தான்! இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்பட்டிருக்கிற நிலையில் ‘தலக்கோணம்’ படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. இப்படத்திற்கும் இவர்களே இசை அமைக்கின்றனர். அண்ணன் – தம்பியான இவர்கள் இசை அமைத்த முதல் படம் ‘பூவே பெண் பூவே’. இரண்டாவதாக இசை அமைத்த படம் ‘என்னவோ பிடிச்சிருக்கு’. இப்படங்கள் சொல்லும்படியான வெற்றியை பெறாததால் இவர்கள் மீது புகழ் வெளிச்சம் படவில்லை. நிறைய விளம்பர படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர்கள், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா உட்பட பல இசை அமைப்பாளர்களிடம் கீ போர்டு வாசித்துள்ளனர். ‘அவர்கள் தந்த ஊக்கத்தினால் தான் நாங்கள் இசை அமைப்பாளர்கள் ஆனோம்’ என்று கூறும் சுபாஷ் – ஜவஹரின் தந்தை திருமலை பரமசிவமும் ஒரு இசை கலைஞர் தான்! அவர் தான் ‘தலக்கோணம்’ படத்தின் தயாரிப்பாளர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீண்டும் ஒரு காதல் கதை - டிரைலர்


;