விஜய்யின் அடுத்த பட டைட்டில்?

விஜய்யின் அடுத்த பட டைட்டில்?

செய்திகள் 10-Oct-2014 11:01 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளி வெளியீட்டிற்காக ‘கத்தி’யைக் கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும். இப்படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகா மோத்வானியும் நடிக்க ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும், நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தை விஜய்யின் மேனேஜரான பி.டி.செல்வகுமாரும், கேரளாவின் ‘தமீன் ரிலீஸ்’ நிறுவனத்தின் ஷிபுவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாக சொல்லப்படும் இப்படத்திற்கு இதுவரை ‘டைட்டில்’ எதுவும் வைக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘மாரீசன்’ என்ற தன் பழைய டைட்டிலை பயன்படுத்தலாமா என யோசித்து வருகிறாராம் இயக்குனர் சிம்புதேவன். இந்த டைட்டிலை தனுஷை வைத்து 2011ல் தான் இயக்கவிருந்த படத்திற்காக பதிவு செய்து வைத்திருக்கிறாராம் அவர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;