இறுதிக்கட்டத்தில் மிஷ்கினின் ‘பிசாசு’!

இறுதிக்கட்டத்தில் மிஷ்கினின் ‘பிசாசு’!

செய்திகள் 10-Oct-2014 10:33 AM IST Chandru கருத்துக்கள்

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது. லண்டன் ஃபிலிம் டெக்னாலஜி படித்து முடித்துவிட்டு சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் இப்படத்தின் நாயகன் நாகா. இப்படத்தில் ‘பிசாசா’க நடித்திருப்பவர் புதுமுகம் பிரயாஹா. பெரும்பாலும் தன் படங்களுக்கு இளையராஜாவைப் பயன்படுத்தும் மிஷ்கின் இப்படத்தில் அரோல் குரோலி எனும் புதிய இசையமைப்பாளரைப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘பிசாசு’ படம் வழக்கமான பேய்ப் படங்களைப் போல் இருக்காதாம். அன்பும், காதலும் நிறைந்த ஒரு நல்ல பேயின் கதையைத்தான் இப்படத்தில் காட்டியிருக்கிறாராம் மிஷ்கின். இன்னும் சொல்லப்போனால் ‘இப்படத்தில் வரும் பிசாசு போல் நமக்கும் ஒரு காதலி கிடைக்காதா’ என ஒவ்வொரு ரசிகனும் ஏங்கும் வகையில் இப்படம் இருக்குமாம். படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்காக ஹாங்காங்கிலிருந்து புரூஸ் லீ படங்களில் பணியாற்றிய டோனி எனும் ஸ்டன்ட் இயக்குனரை வரவழைத்து படமாக்கியிருக்கிறார்கள். இந்த க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்படும்போது தயாரிப்பாளர் பாலாவும் உடனிருந்து ‘பிசாசு’ படக்குழுவினரை வாழ்த்திவிட்டுச் சென்றாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டீசர்


;