அஜித்தான் உண்மையான சூப்பர்ஸ்டார்... சொல்கிறார் அருண் விஜய்!

அஜித்தான் உண்மையான சூப்பர்ஸ்டார்... சொல்கிறார் அருண் விஜய்!

செய்திகள் 10-Oct-2014 10:16 AM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். ஆனாலும், அவரின் கடுமையான உழைப்புக்கேற்ற பலன் இன்னமும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் சம கால ஹீரோக்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரிய உயரங்களில் பயணித்துக் கொண்டிருக்க தனக்கான ‘பிரேக்கிங்’ பாயின்ட்டுக்காக சோர்வடையாமல் காத்துக் கொண்டிருக்கிறார் இந்த சினிமா காதலன். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த ‘தடையற தாக்க’ படம் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அந்த உற்சாகத்தில் தற்போது சிவஞானம் இயக்கத்தில் ‘வா டீல்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இதுபுறமிருக்க திடீரென வித்தியாசமான அழைப்பு ஒன்று கௌதம் மேனனிடம் இருந்து அருண் விஜய்க்கு வந்தது. ‘அஜித் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா?’ என கௌதம் கேட்கவும் கொஞ்சம் தாமதிக்காமல் ‘சட்’டென்று ஓ.கே. சொன்னார்.

அதன் பிறகு நடந்ததையெல்லாம் அவருக்கு கனவு போல நிகழ்ந்திருக்கிறது. அஜித்துடன் ஷூட்டிங் கலந்து கொண்ட அனுபவங்களை அவ்வப்போது தன் ‘ட்வீட்’டில் பரவசமாக சொல்லிக் கொண்டே வந்தார். தற்போது ‘தல 55’ படம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அனேகமாக அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அஜித் பற்றி லேட்டஸ்டாக ஒரு ட்வீட்டில் ‘‘நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை பக்கத்திலிருந்து உணர்ந்திருக்கிறேன்... அவர் உண்மையிலேயே சூப்பர்ஸ்டார்தான்! எனக்கு நிஜமான இன்ஸ்பிரேஷன் அவர்தான்! எதையுமே அவர் பொய்யாக செய்வதில்லை! அவருடன் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கிறேன்! அஜித்!’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;