தமன்னா நடிக்க ஏங்கும் படம்?

தமன்னா நடிக்க ஏங்கும் படம்?

செய்திகள் 10-Oct-2014 9:57 AM IST Chandru கருத்துக்கள்

2011ல் வெளிவந்த ‘வேங்கை’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் தமிழில் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்தார் தமன்னா. அதன் பிறகு வரிசையாக படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், எந்த அவசரமும் இல்லாமல் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்தார் தமன்னா. இந்நிலையில், ஆர்யா, சந்தானம் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கான அழைப்பு தமன்னாவுக்கு வந்தது. கதை மிகவும் பிடித்துப் போனதாலும், வித்தியாசமான கூட்டணி என்பதாலும் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார் தமன்னா. இப்படத்தை ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிப்பது குறித்து, ‘‘ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானத்துடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது வரும் என காத்திருக்க முடியாமல் தவிக்கிறேன். அந்த சந்தர்ப்பத்தை நினைத்தாலே ரொம்பவும் ஜாலியாக இருக்கிறது!’’ என ட்வீட் செய்திருக்கிறார் நடிகை தமன்னா.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;