சந்தானத்திற்கு ஜோடியாகும் அனுஷ்கா?

சந்தானத்திற்கு ஜோடியாகும் அனுஷ்கா?

செய்திகள் 10-Oct-2014 9:19 AM IST Chandru கருத்துக்கள்

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் பார்த்துவிட்டு, தன் படங்களில் பணியாற்றிய காமெடியன் சந்தானம் ஹீரோ புரமோஷன் ஆனதைப் பற்றி பாராட்டிப் பேசும்போது, ‘‘அடுத்த படம் நாம சேர்ந்து பண்ணாலாமா? நல்ல கதை இருந்தா சொல்லுங்க’’ என விளையாட்டாக ஒரு ‘பிட்’டையும் போட்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா. அதற்கு சந்தானம் ‘‘ராஜேஷ் டைரக்ஷன்ல ஆர்யாகூட ஒரு படம் நடிக்கிறேன். அதுல ஹீரோயின் தேடுறாங்க. நீங்க பண்றீங்களா?’’ என கவுன்ட்டர் கொடுத்திருக்கிறார். அனுஷ்காவும் அதற்கு விட்டுக்கொடுக்காமல், ‘‘அனுஷ்காவை ஜோடியா கமிட் பண்ணாத்தான் நான் படத்தில நடிப்பேன்னு சொல்லிடுங்க. சேர்ந்து நடிச்சிடுவோம்’’ என்றிருக்கிறார்.

இது நடந்து கொஞ்ச நாட்கள் கழித்து, ஒரு முறை ‘லிங்கா’ ஷூட்டிங்கில் ரஜினியைப் பார்க்க இயக்குனர் ராஜேஷ் வந்தாராம். அப்போது அனுஷ்காவிடம் பேசியது சந்தானத்திற்கு ஞாபகம் வர, ராஜேஷிடம் சென்று, ‘‘சார், எனக்கு ஹீரோயின் கிடைச்சிட்டாங்க... இவங்கதான்’’ என பக்கத்தில் இருந்த அனுஷ்காவை கையைக் காட்டவும் மிரண்டு போனாராம் ராஜேஷ். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் சந்தானம்.

கேட்கிறதுக்கு காமெடியா இருந்தாலும், ‘கோலிவுட்’ல இதெல்லாம் நடந்தாலும் நடக்கும்... யாருக்கு தெரியும்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;