ஷாருக்கான் படத்தை நிறுத்தப் போவதில்லையாம்!

ஷாருக்கான் படத்தை நிறுத்தப் போவதில்லையாம்!

செய்திகள் 9-Oct-2014 2:52 PM IST VRC கருத்துக்கள்

ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995- ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் வெளியான ஹிந்தி படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்னமும் (சுமார் 19 ஆண்டுகளாக…) மும்பையிலுள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு இப்போது ரசிகர்களின் வருகை குறைந்து விட்டதால், படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் தியேட்டரிலிருந்து எடுத்துவிட அந்த தியேட்டர் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து ஏராளமான பாலிவுட் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, இன்னும் கொஞ்ச காலம் அந்தப் படத்தை ஓட்ட இப்போது அந்த தியேட்டர் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனராம! தினமும் காலை 11-30 காட்சியாக ஓடும் இப்படத்திற்கு இன்னமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருவதை தான் இது காட்டுகிறது. இந்திய சினிமா சரித்திரத்திலேயே ஒரு படம் இவ்வளவு காலம் ஒரு தியேட்டரில் தொடர்ந்து ஓடுவது இதுவே முதல் முறையாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஐபி 2 - புதிய டீஸர்


;