‘சுற்றுலா’வில் 3 நாயகிகளுடன் ரிச்சர்ட்!

‘சுற்றுலா’வில் 3 நாயகிகளுடன் ரிச்சர்ட்!

செய்திகள் 9-Oct-2014 12:02 PM IST VRC கருத்துக்கள்

ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சுற்றுலா’. ராஜேஷ் ஆல்பிரட் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் இப்படத்தில் ரிச்சர்ட், ஜானி என்ற வில்லத்தனம் கலந்த பாத்திரத்தில் நடிக்கிறார். ‘‘ நான் பல படங்களில் நடித்திருந்தாலும் வில்லத்தனம் கலந்த கதாநாயகன் வேடம் என்பதால் இப்படத்தில் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்’’ என்கிறார் ரிச்சர்ட். இப்படத்தில் தாநாயகிகளாக ஸ்ரீஜி, அங்கிதா, சாண்ட்ரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் ராஜெஷ் ஆல்பிரட் இப்படி கூறுகிறார்… ‘இப்படம் ஒரே நாளில் நடக்கும் கதை. மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரப்பான முறையில் திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறோம். ஜானி என்ற கதாப்பாத்திரத்தில் ரிச்சர்ட் நெகடிவ் வேடம் ஏற்றிருக்கிறார். இப்படம், அவரது கலையுலக அங்கீகாரத்திற்கு அஸ்திவாரம் போடும் படமாக இருக்கும். அடுத்து என்ன ? அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஆங்கிலப் படத்திற்கு நிகரான திரைக்கதை இதில் இருக்கும்’’ என்கிறார்.

பரணி இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பெறுப்பை ரவி சாமி ஏற்றுள்ளார்.
இப்படத்தை ‘ஜெம் என்டர்டெயின்மென்ட் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஜே.ரமேஷ் வழங்க, ‘எம்.ஜெயகுமார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;