ஆர்யா - எம்.ராஜேஷ் படம் இரண்டாம் பாகம் இல்லையாம்!

ஆர்யா - எம்.ராஜேஷ் படம் இரண்டாம் பாகம் இல்லையாம்!

செய்திகள் 9-Oct-2014 11:48 AM IST Chandru கருத்துக்கள்

‘சிவா மனசுல சக்தி’ மூலம் அறிமுகமான இயக்குனர் எம்.ராஜேஷின் இரண்டாவது படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த இப்படம் சூப்பர்ஹிட் வரிசையில் இடம்பிடித்தது. இதற்கடுத்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘அழகுராஜா’ ஆகிய படங்களை இயக்கினார் ராஜேஷ். தற்போது தனது 5வது படமாக மீண்டும் நடிகர் ஆர்யாவுடன் இணைந்திருக்கிறார் ராஜேஷ்.

முதலில் இப்படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இது இரண்டாம் பாகம் இல்லை என்பதை ராஜேஷே தற்போது தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் குறிப்பிடும்போது, ‘‘நான் தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்கிரிப்ட் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. இது முற்றிலும் புதிய ஒரு கதை. இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது!’’ என்றார்.

இப்படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்த தகவல் எதையும் அவர் தரவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;