பாங்காங்கில் சரத்குமார், ஓவியா!

பாங்காங்கில் சரத்குமார், ஓவியா!

செய்திகள் 9-Oct-2014 11:48 AM IST VRC கருத்துக்கள்

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சரதுகுமாருடன் ஓவியா, மீரா நந்தன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய கேரக்டர் ஒன்றில் சமுத்திரகனியும் நடிக்கிறார். இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் சரத்குமார், ஓவியா பங்கேற்ற ‘ உன்னை மட்டும் சுத்த வச்சியே… உன் பேர கத்த வச்சியே … எனக்குள்ளே பேச வச்சியே…’ என்ற பாடல் காட்சி பாங்காங்கில் படமாகப்பட்டது. இந்த பாடல் காட்சியை பிரபல ஹிந்திப் பட டான்ஸ் மாஸ்டரான விஷ்ணு தேவா நடனம் அமைக்கப் படமாக்கப்பட்டது.

‘ சண்டமாருதம்’ படம் குறித்து இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறும்போது, ‘‘ இது கமர்ஷியல் படம். நல்ல கதைக்களம். திறமையான கதாநாயகன் மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள், சின்சியரான தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டு முயற்சியால் உருவாகி வருகிறது. இப்படம் அனைவருக்குமான படமாக இருக்கும்’’ என்றார். இப் படத்தை ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனம் சார்பில் சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;