‘ஜெயம்’ ரவியுடன் ஹன்சிகா, பூனம் பஜ்வா டூயட்!

‘ஜெயம்’  ரவியுடன் ஹன்சிகா, பூனம் பஜ்வா டூயட்!

செய்திகள் 9-Oct-2014 11:29 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லக்‌ஷ்மண் கதை திரைக்கதை எழுதி இயக்கி வரும் இப்படத்திற்காக மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் பாடல் காட்சி ஒன்றை சமீபத்தில் படம் பிடித்துள்ளனர். ‘ரோமியோ ரோமியோ…’ என்று வரும் இந்தப் பாடல் காட்சியில் ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா பங்கேற்றனர். மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுக்கு இமான் இசையமைத்த இந்த பாடல் காட்சி மிகப் பிரமாண்டமான முறையில் படமாகப் பட்டுள்ளது. இதில் நூற்றுக்குன் மேற்பட்ட வெளிநாட்டு டான்சர்கள் பங்கேற்றனர். இந்த பாடலை மும்பையின் பிரபல பாடகரான விஷால் தட்லாணி பாடியுள்ளார். அத்துடன் ‘அடியே அடியே…. என் வாழ்க்கையை வீணாக்க பொறந்தவளே ’ என்ற ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுளளது. இதில் ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா பங்கேற்க சென்னை அருகே துறைமுகம், காசிமேடு மற்றும் விமான நிலையம் போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தை ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;