விக்ரம் படத்தில் இணையும் சார்மி!

விக்ரம் படத்தில் இணையும் சார்மி!

செய்திகள் 9-Oct-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம், விஜய் மில்டன் இணைந்துள்ள ‘பத்து எண்றத்துக்குள்ள’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்காக பூனாவில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து அதில் ஒரு பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்களாம். இந்தப் பாடல் காட்சியில் சார்மி நடிக்க இருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் வரும் வித்தியாசமான பாடல் காட்சியாம் இது! ஆனால் இதில் சார்மி நடனம் ஆட மாட்டாராம், பாடல் முழுக்க வரும் வித்தியாசமான ஒரு கேரக்டராம் சார்மிக்கு! கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய் செலவில் அந்த செட் உருவாகவிருப்பதாகவும், இந்த மாத கடைசியில் அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;