‘கத்தி’ பிஜிஎம்.... அனிருத்தின் தூங்காத இரவுகள்!

‘கத்தி’ பிஜிஎம்.... அனிருத்தின் தூங்காத இரவுகள்!

செய்திகள் 9-Oct-2014 10:46 AM IST Chandru கருத்துக்கள்

‘கத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படக்குழுவின் ‘பிரஷர்’ அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. படத்தை சென்சாருக்கு அனுப்ப வேண்டும், டிரைலரை வெளியிட வேண்டும், பின்னணி இசைப் பணிகளை முடிக்க வேண்டும், புரமோஷன்களை பெரிய அளவில் செய்ய வேண்டும் என ஏ.ஆர்.முருகதாஸும், ‘லைகா புரொடக்ஷனு’ம் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்கள். தற்போது ‘கத்தி’ படத்தின் பின்னணி இசை சேர்க்கும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் அனிருத். இதுகுறித்து, ‘ஹலோ.... ஸ்டுடியோவிலிருந்து... ‘கத்தி’ பின்னணி இசை வேலை இரவு பகலாக போய்க்கொண்டிருக்கிறது... ‘கத்தி’ கூர்யாமையாகிக் கொண்டிருக்கிறது...’ என ட்வீட் செய்திருக்கிறார் அனிருத்.

லேட்டஸ்ட் தகவலின்படி ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான அக்டோபர் 17ஆம் தேதியே வெளியிடலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;