‘தல 55’-ல் அஜித்துக்கே தெரியாத க்ளைமேக்ஸ்!

‘தல 55’-ல் அஜித்துக்கே தெரியாத க்ளைமேக்ஸ்!

செய்திகள் 9-Oct-2014 10:14 AM IST Chandru கருத்துக்கள்

தன் படங்களின் முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடித்தாலும், க்ளைமேக்ஸை மட்டும் கடைசிவரை யோசிக்கவே மாட்டாராம் கௌதம் மேனன். படத்தின் மத்த காட்சிகளையெல்லாம் எடுக்கும்போது, கடைசி நேரத்தில் அவர் மனதில் தோன்றும் விஷயத்தையே க்ளைமேக்ஸிற்கு பயன்படுத்துவாராம். இந்த முறையை ‘மின்னலே’ படத்தில் தொடங்கிய கௌதம் கடைசியாக வெளிவந்த ‘நீதானே என் பொன்வசந்தம்’ வரை பின்பற்றி வந்திருக்கிறார்.

இதேபோல்தான் அஜித்தை வைத்து இயக்கும் படத்திலும், படத்தின் முதல் பாதியையும், இரண்டாம் பாதியின் முதல் அரை மணி நேரம் வரைக்கும்தான் அஜித்திடம் கதை சொல்லியிருக்கிறாராம் கௌதம். அதுவே அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதால், க்ளைமேக்ஸைப் பற்றி கேட்காமலேயே படப்பிடிப்பில் கலந்து வருகிறாராம் அஜித். இப்போது, படத்தின் மத்த காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து க்ளைமேக்ஸ் படமாக்கப்பட்டு வருவதால் அனேகமாக இந்நேரம் அந்த ரகசியம் அஜித்திற்கு தெரிந்திருக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;