ஜிம், பாக்ஸிங், கிடார்... கௌதமை அசத்திய அஜித்!

ஜிம், பாக்ஸிங், கிடார்... கௌதமை அசத்திய அஜித்!

செய்திகள் 9-Oct-2014 9:49 AM IST Chandru கருத்துக்கள்

தங்களின் எதிர்பார்ப்பை கௌதம் மேனன் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதில் ஒவ்வொரு ‘தல’ ரசிகருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அதை பறைசாற்றும் வகையில் இருக்கிறது இப்படம் பற்றி வெளிவரும் ஒவ்வொரு செய்தியும், புகைப்படங்களும். லேட்டஸ்டாக கௌதம் மேனன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் அஜித் பற்றி தெரியாத பல ரகசியங்களை வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தின் ஹீரோ... 28 வயதிலிருந்து 38 வயது வரைக்கும் 10 வருட காலகட்டத்திற்கு பயணிப்பதுபோல் கதையை உருவாக்கியிருக்கிறாராம் கௌதம். இந்தக் கதையை அஜித்திடம் சொன்னதோடு, வேறு எந்தவிதமான மாற்றத்தையும் அஜித்திடம் கௌதம் கேட்கவே இல்லையாம். ஆனால், அவராகவே முன்வந்து ‘ஜிம்’மிற்கு சென்று உடம்பைக் குறைத்து ‘ஸ்லிம்’மாக வந்து நின்றாராம். அதேபோல் ஒரு கெட்அப்பிற்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் தேவைப்பட்டதால் அவரின் பழைய தோற்றத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டார்களாம். இன்னொரு கெட்அப்பில் ‘கரு கரு’ தலைமுடி அஜித்தும், வேறொரு தோற்றத்திற்கு தாடி, மீசையுடன் முரட்டு அஜித்தும் இப்படத்தில் தோன்றுவார்களாம்.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் கிடைத்த ‘கேப்’பில் பாக்ஸிங்கும் கற்றுத் தேர்ந்திருக்கிறார் தல. இதைத் தெரிந்து கொண்ட கௌதம் படத்தின் ஒரு காட்சியில் அஜித் பாக்ஸிங் செய்யும் காட்சியையும் பயன்படுத்தியிருக்கிறாராம். இதுதவிர ‘கிடார்’ வாசிக்கவும் கற்றுக் கொண்டாராம் அஜித். அனேகமாக ஏதாவது ஒரு பாடலில் ‘தல’ கிடாருடன் வந்து டான்ஸ் ஆடினால் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

ஆனால் இதெல்லாம் வெறும் டிரைலர்தானாம்... ‘மெயின் பிக்சர்’ல இன்னும் ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்கிறார் கௌதம் மேனன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;