அதிரடி ஆஃபர்! பெண்களுக்கு இலவச காட்சி!

அதிரடி ஆஃபர்! பெண்களுக்கு இலவச காட்சி!

செய்திகள் 8-Oct-2014 12:29 PM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடிப்பில் வருகிற 10-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படம் ‘நீ நான் நிழல்’. இளம் தலைமுறையினர், அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் பார்க்க வேண்டிய படமாம் இது! இதனால், தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் இப்படத்தை இலவசமாக பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறார் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் டாக்டர் பி.ஜி.எம்.சிவகுமார். அதாவது இப்படம் வெளியான முதல இரண்டு நாட்களில் அனைத்து தியேட்டர்களிலும், அனைத்து காட்சிகளுக்கும் முதலாவதாக வரும் 50 மாணவ, மாணவியர்கள் தங்களது பள்ளி, கல்லூரியின் அடையாள அட்டை நகலை கொடுத்து இலவசமாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு இலவசமாக படத்தை பார்க்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
இதைப் போல வருகிற 10-ஆம் தேதி கேரளாவில் ரிலீசாகும் ‘100 டிகிரி செல்ஷியஸ்’ மலையாள படமும் பெண்களுக்காக ஒரு இலவச திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது இப்படம் ரிலீசாகும் முதல் நாள் (மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் தவிர்த்து) அனைத்து தியேட்டர்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் முதலாவதாக வரும் 50 பெண்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்வேதா மேனன், பாமா, அனன்யா, மேக்னா ராஜ், ‘மைனா’ புகழ் சேது ஆகியோர் நடித்திருக்கும் இப்படமும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமாம்! இந்தப் படத்தை ராகேஷ் கோபன் இயக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;