விஷால், வரலட்சுமி இணைந்து தயாரிக்கும் ‘சிகாகோ’

விஷால், வரலட்சுமி இணைந்து தயாரிக்கும் ‘சிகாகோ’

செய்திகள் 8-Oct-2014 12:29 PM IST Chandru கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும், இரண்டு பேரும் இணைந்து ‘சிகாகோ’ என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார்கள் போல என நினைக்க வேண்டாம். ‘சிகாகோ’ என்ற இசை நிகழ்ச்சியைத்தான் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், வரலட்சுமி சரத்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ‘போடா போடி’ புகழ் ‘சல்ஸா’ நடன இயக்குனரான ஜெஃப்ரி வார்டன் இயக்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகென்றே பிரத்யேக இசையமைக்க உள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இந்த இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 11 மற்றும் 12ஆம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை சேத்துப்பட்டிலுள்ள ‘சர் முத்தா வெங்கட சுப்பா ராவ்’ கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;