விஷாலின் அடுத்த சூப்பர் திட்டம்?

விஷாலின் அடுத்த சூப்பர் திட்டம்?

செய்திகள் 8-Oct-2014 12:18 PM IST Chandru கருத்துக்கள்

இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகில் நுழைந்த விஷால் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அதோடு, ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி படங்களைத் தயாரித்தும், வாங்கி வெளியிட்டும் வருகிறார். அதோடு ‘பூஜை’ படத்திலிருந்து ‘வி மியூசிக்’ என்ற ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.

விஷாலின் இந்த புது புது முயற்சிகளின் அடுத்த கட்டமாக தற்போது மேடை நடிகர்களுக்கு (தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்) சினிமாவில் சாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அமைப்பை ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறாராம். இதுகுறித்து பேசிய நடிகர் விஷால், ‘‘நடிப்பில் என்னை வளர்த்துக் கொள்வதற்கு மேடை நடிப்புப் பயற்சிகள் எனக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. இங்கே திறமையான பல மேடை நடிகர்கள் உள்ளனர். சரியான வாய்ப்புக் கிடைத்தால் அவர்களால் பெரிய அளவில் சினிமாவிலும் ஜொலிக்க முடியும். எனவே அவர்களையும் திரையுலகத்தையும் இணைக்கும் வகையிலான அமைப்பு ஒன்றை நிறுவும் முயற்சியில் நான் இறங்கியிருக்கிறேன்!’’ என்றார்.

விரைவில் படம் ஒன்றை இயக்கும் திட்டமும் விஷாலிடம் இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;