உச்சத்தைத் தொடும் ‘கத்தி’ ரிலீஸ் பிளான்!

உச்சத்தைத் தொடும் ‘கத்தி’ ரிலீஸ் பிளான்!

செய்திகள் 8-Oct-2014 11:07 AM IST Chandru கருத்துக்கள்

வரும் வெள்ளிக்கிழமை ‘கத்தி’ படம் சென்சாருக்கு செல்லவிருப்பதாகவும், சனிக்கிழமை அதன் முழுநீள டிரைலர் ஒன்று வெளிவரவிருப்பதாகவும் ‘கத்தி’க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஏற்கெனவே நடித்த ‘துப்பாக்கி’ படம் தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதுவே இதுவரை விஜய் நடித்த படங்களில் அதிக தியேட்டர் எண்ணிக்கையில் வெளியான படமாக இருந்து வந்தது.

இப்போது இந்த சாதனையை ‘கத்தி’ படம் முறியடிக்கும் என்கிறார்கள். இப்படம் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 450 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறதாம். அதேபோல் கேரளாவிலும் இப்படத்தை 200 தியேட்டர்களில் வெளியிடலாம் என ஆலோசித்திருக்கிறார்களாம். மோகன்லாலும் விஜய்யும் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படமும் கேரளாவில் 200 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம், கேரளா தவிர்த்து ஆந்திராவிலும் ‘கத்தி’யின் தெலுங்கு டப்பிங் தீபாவளியன்றே வெளியாகவிருக்கிறது. இதுதவிர கர்நாடகம், வடஇந்தியா, வெளிநாடுகள் போன்றவற்றிலும் ‘கத்தி’யை பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறதாம் லைகா புரொடக்ஷன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;