ஆரம்பமானது மாதவனின் இரண்டாவது சீஸன்!

ஆரம்பமானது மாதவனின் இரண்டாவது சீஸன்!

செய்திகள் 8-Oct-2014 11:00 AM IST VRC கருத்துக்கள்

மாதவன், கங்கணா ரணாவத் ஜோடியாக நடித்து, 2011-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹிந்திப் படம் ‘தனு வெட்ஸ் மனு’. ஆனந்த் எல்.ராய் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவிருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நேற்று (7-10-14) இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி விட்டது. ‘தனு வெட்ஸ் மனு சீஸன் 2’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன், கங்கணா ரணாவத் உட்பட முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களே பணியாற்றுகிறார்களாம்! இந்தப் படத்தை ‘ஈராஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல - டீசர்


;