ஷூட்டிங் ஆரம்பமானது மணிரத்னம் படம்!

ஷூட்டிங் ஆரம்பமானது மணிரத்னம் படம்!

செய்திகள் 8-Oct-2014 10:35 AM IST VRC கருத்துக்கள்

‘கடல்’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது. இப்படத்தில் மம்முட்டியின் மகனும், ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது ஏற்கெனவே முடிவான விஷயம். இப்படத்திற்காக பல முன்னணி கதாநாயகிகளை பரிசீலித்த மணிரத்ம், இப்போது நித்யா மேனனை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார். அத்துடன் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படங்கள் உட்பட பல படங்களில் நடித்த பிரகாஷ் ராஜும் இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். மணிரத்னத்தின் ஆரம்பகால ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். இது குறித்து பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில், ‘‘மணிரத்னத்தின் எனர்ஜி மற்றும் செயல்பாடுகள் இன்னமும் என்னை வியக்க வைக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைபாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - வான் வருவான் பாடல் ப்ரோமோ


;