19 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஷாருக்கான் படம்!

19 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஷாருக்கான் படம்!

செய்திகள் 7-Oct-2014 1:59 PM IST VRC கருத்துக்கள்

இந்திய அளவில் மிகப் பெரிய ஹிட்டான படம் ஷாருக்கான், கஜோல் ஜோடியாக நடித்து, ஆதித்யா சோப்ரா இயக்கிய ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’. 1995, அக்டோபர் மாதம் வெளியான இப்படம் இன்னமும் மும்பையிலுள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது கடந்த 19 ஆண்டுகளாக இப்படம் அந்த தியேட்டரில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இது இந்திய சினிமா சரித்திரத்திலேயே ஒரு பெரும் சாதனை தான்! ஆனால் இந்த வருட கடைசியுடன் இப்படத்தினை அந்த தியேட்டரிலிருந்து எடுக்க அந்த தியேட்டர் நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதற்கு காரணம் சமீபகாலமாக இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாம்! வருகிற டிசம்பர் மாதத்துடன் இப்படம் வெளியாகி 1000 வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னால் அதிக நாட்கள் தொடர்ந்து ஓடிய ஹிந்தி படம் அம்ஜத்கான் நடித்த ‘ஷோலே’ திரைப்படம் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஐபி 2 - புதிய டீஸர்


;