ஸ்ரீதிவ்யா! - ஹாட்ரிக் ‘ஸ்கூல் பொண்ணு’

ஸ்ரீதிவ்யா! - ஹாட்ரிக் ‘ஸ்கூல் பொண்ணு’

செய்திகள் 7-Oct-2014 12:28 PM IST Chandru கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் ஊதா கலரு ரிப்பனாக அனைவரது நெஞ்சங்களிலும் குடிகொண்டவர் ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இந்த 18 வயது அழகுப்புயல், பள்ளி மாணவி கேரக்டரில் நடித்திருந்தார். இதேபோல் கடந்த வாரம் வெளியான ‘ஜீவா’ படத்திலும் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘ஸ்கூல் கேர்ள்’ ஜெனியாக நடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘பென்சில்’ படத்திலும் ஸ்ரீதிவ்யாவிற்கு ஸ்கூல் பெண் வேடம்தான். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெளிவந்த முதல் 3 படங்களிலும் பள்ளி மாணவியாக நடித்த ஒரே கதாநாயகி அனேகமாக ஸ்ரீதிவ்யாவாகதான் இருப்பார்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாணா’, அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஈட்டி’, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘வெள்ளக்கார துரை’ ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;