மிஷ்கின் படத்தில் ‘சிக்ஸ் பேக்’ சரத்குமார்?

மிஷ்கின் படத்தில் ‘சிக்ஸ் பேக்’ சரத்குமார்?

செய்திகள் 7-Oct-2014 12:06 PM IST VRC கருத்துக்கள்

சரத்குமார் நடித்துள்ள ‘நீ நான் நிழல்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் ‘சண்ட மாருதம்’ படத்திலும் நடித்து வருகிறார் சரத்குமார். இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சரத்குமார், அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அதில் சிக்ஸ் பேக் வைத்து வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றும், இதற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. மிஷ்கின் தற்போது இயக்கி வரும் ‘பிசாசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதைப்போல ஏ.வெங்கடேஷ் இயக்கும் சரத்குமாரின் ‘சண்டமாருதம்’ படப்பிடிப்பும் படு ஸ்பீடாக நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும் சரத்குமார், மிஷ்கின் இணையும் படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - டீசர்


;