விக்ரம், பார்த்திபன், லாரன்ஸ் ஸ்டைலில் விஷால்!

விக்ரம், பார்த்திபன், லாரன்ஸ் ஸ்டைலில் விஷால்!

செய்திகள் 7-Oct-2014 11:52 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஊட்டியில் துவங்குகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா என மூன்று ஹீரோயின்கள் நடிக்க, அவர்களின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். வழக்கமான சுந்தர்.சி பட பாணியில் காமெடி குடும்பப் படமாக உருவாகும் இந்த ‘ஆம்பள’ படத்திற்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்ததாம். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்படவே, தற்போது இப்படத்திற்கு 5 இசையமைப்பாளர்களைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறாராம் சுந்தர்.சி. அதில் ஒருவர் பாடகர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இவர் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் விஷ்ணுவின் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இன்னொருவர் ஏ.ஆர்.ரஹ்மானின் டீமிலிருந்து இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறாராம். மற்ற 3 இசையமைப்பாளர்களுக்கான ஆலோசனைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

வசந்த்தின் இயக்கத்தில் வெளிவந்த ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’, விக்ரம், ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘டேவிட்’, பார்த்திபனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் ‘கங்கா’ ஆகிய படங்களில் இதுபோல பல இசையமைப்பாளர்கள் ஒரே படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;